அலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி?

கணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும், அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது, மறைந்தது.

இந்நிலையில், தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக தற்போது தமிழில் பேசுவதை எப்படி எழுத்துக்களாக மாற்றுவது என்பதில் கேள்விகளும், ஐயப்பாடும் நிலவுகிறது.
 தொடர்ந்து வாசிக்க

ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்: இதய துடிப்பை அறியும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள்

உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

 தொடர்ந்து வாசிக்க

AdSense விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்!

ஆட்சென்ஸ் விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்!
ஆட்சென்ஸ் (Adsense) எனப்படுவது, கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவை.

வெற்றெழுத்து (text), படங்கள், காணொளிகள் மட்டுமல்லாமல் மற்ற ‘ஊடாடும் வடிவங்கள்’ (interactive media) வழியாகவும், இந்த விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.

 தொடர்ந்து வாசிக்க

பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது.
அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா முன் வைத்தாலே போதும். கூகுள் மொழியாகச் செயலி, நமக்கு வேண்டிய மொழிகளில் அந்த வரிகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும்.

 தொடர்ந்து வாசிக்க

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்

அழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இனிமேல் நவம்பர் நாலாவது வியாழக்கிழமையில் மட்டுமே நன்றி கூறல் நாள் கொண்டாடப்படவேண்டும் என பிரகடனம் செய்தார்.

 தொடர்ந்து வாசிக்க