தாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்

பொன்னகரில்தான் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம் எல்லாம் உள்ளன. அத்தனையும் புத்தம் புதிய கட்டிடங்கள். நவீன அமைப்பில் புதுப்பொலிவோடு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று பீடங்களுக்குமான நில அளவு எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல 650 ஏக்கராகும். இந்தப் பெரிய நிலப்பரப்பில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால்….! அதிலும் ஆக மூன்றே மூன்று பீடங்கள் மட்டும்தான் என்றால் எவ்வளவு பெரிய இடத்தில் சும்மா சுற்றிக் காடளக்கலாம். காற்றை அளையலாம். விரும்பிய பாட்டுக்கு எங்கும் திரியலாம். மாலை நேரத்தில் மயில்கள் வந்து உலாத்தும். சிலவேளைகளில் மான் கூட்டத்தையும் பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்க

20 வருடங்களை நிறைவு செய்யும் எழில்நிலா!

ஜூலை 14, 2017 உடன் எழில்நிலா வலத்தளம் தனது 20வது வருடத்தைப்பூர்த்தி செய்துகொண்டுள்ளது.

1997ஆம் ஆண்டில் இந்த எழில்நிலா தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட விதமும் அதனுடைய செயற்பாடுகளையும் இத்தளத்தில் இருக்கும் பல கட்டுரைகள் மூலமும் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மூலமும் நீங்கள் தெரிந்துகொள்ளளாம். தமிழை முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்தளம் எவ்வகையான பங்களிப்பைச்செய்திருக்கின்றது என்பதற்கும் அக்கட்டுரைகளும் பின்னூட்டங்களும் சான்றாக உள்ளன.

தொடர்ந்து வாசிக்க

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!

சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.
மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டை, இதுவரை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். நட்பு ஊடகங்கள் வழி மட்டுமே பகிரப்பட்ட இணைப்பு, 26 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைச் சென்றடைந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தமிழ் எழுத்துரு நுட்பங்கள் – 2

2000 மார்ச் முதல் 2004 மே வரையிலான காலகட்டத்தில் விகடன் தனது இணையத்தளத்தைச் சொந்த எழுத்துருவில் வெளியிட்டது. அதன் பிறகு TAM எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தது. பின்னர் 2010 ஜூலை முதல் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்து ShreeTam எழுத்துருவைப் பயன்படுத்திய தினமலர் 2008க்குப் பிறகு படிப்படியாக ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது.

2004 முதல் 2006 காலகட்டத்தில் அமுதம் என்ற எழுத்துருவைப் பயன்படுத்திய தினகரன் பின்னர் சில காலம் TAM எழுத்துருவைப் பயன்படுத்தி 2009ல் ஒருங்குறிக்கு மாறியது. 2004லிலிருந்து தினமணிக்கென தனியான எழுத்துருவில் வெளிவந்து பின்னர் 2009 ஏப்ரல் 14 முதல் ஒருங்குறிக்கு மாறியது. இதில் சில ஊடகங்களின் உள்பயன்பாடு இன்னும் பழைய எழுத்துருவிலேயே உள்ளது. அவை வெளியிடும் பிடிஎப் கோப்புகளைப் பார்த்தால் இவ்வெழுத்துருவை இன்றும் காணலாம்.

தொடர்ந்து வாசிக்க

தமிழ் எழுத்துரு நுட்பங்கள் – 1

இன்று இணையத்திற்குப் புதிதாக வரும் பெரும்பாலானோர் தமிழ் எழுத்தின் குறியாக்கம்(encoding) பற்றி கவலைப்படத் தேவையில்லை. அந்தளவிற்கு ஒருங்குறி(unicode) முறை பரவிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் வரைகூட எந்தக் குறியாக்கத்தில் எழுதுவது என்றும் எந்தக் குறியாக்கத்தைப் படிப்பதென்றும் சிக்கல் நிலவியது. அப்போது எழுதப்பட்ட வலைப்பதிவு முதல் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை இன்றும் காணலாம். அந்தத் தமிழ்ப் பக்கங்கள் விதவிதமாகக் குறியீடுகளுடன் காணப்படும். அவற்றைப் படிக்கத் தனி எழுத்துருவைத் தரவிறக்கிப் படிப்பார்கள்.

தொடர்ந்து வாசிக்க