எரிமலை

ஓ இன்று கோகிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் கோகிலாவின் அண்ணி சுதா அவளை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.

கோகிலா அண்மையில்தான் கனடா வந்திருந்தாள். அவள் அண்ணன் ராகவனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான். தொடர்ந்து வாசிக்க..

அந்த அழுகையின் அர்த்தம் என்ன?

அந்த மரண வீட்டிலே பெரும் பாலானோர் அப்பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். அவ்வாறு வருபவர்களை அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக் காரர் என்று சொல்லவும் வேண்டுமா?
தொடர்ந்து வாசிக்க..

தவிப்புக்கள்

பிள்ளைகளை நித்திரையாக்கிவிட்டு தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பல்கணியில் போயிருந்தாள். காலநிலை மிகவும் இதமாக இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக உடலை வருடிக்கொடுத்தது.வசந்த காலம் என்பதால் பல வண்ணங்களிலே பலவிதமான பூக்கள் பூத்துசொரிந்து கொண்டிருந்தன. பட்டமரங்கள் தளிர்விட்டு தாம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவு படுத்தின. அவையும் எதிர்பார்ப்புகளுடன் தானே காத்திருந்திருக்கும்… தொடர்ந்து வாசிக்க..

சுயரூபம்

இன்று மாலதிக்கு விடுமுறை. இன்றாவது சிறிது நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டுதான் இரவு படுத்தவள். ஆனால் அதிகாலை மூன்று மணிக்கே டெலிபோன் வந்து அவளை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. மனம் இருப்புக்கொள்ளவில்லை. பலமான காற்று வீசும்போது எல்லாமே பறப்பதுபோல நில்லாமல் நீந்திவரும் நினைவலைகளென பலவகையான எண்ணங்கள் அவள் மனத்திரையிலே வந்து வந்து அலைமோதிக்கொண்டிருந்தன. படுக்கையிலே புரண்டு புரண்டு படுத்தாள்.
தொடர்ந்து வாசிக்க..

நீர்க்குமிழி

திண்ணையிலே குந்தியிருந்துகொண்டு முழங்கால்கள் இரண்டையும் தன்னிரு கரங்களினாலும் இறுகக் கட்டிப் பிடித்தபடி முகத்தை அக்கரங்களுக்குள் புதைத்தவளாக சிந்தனைச் சிறகுகளை அகல விரித்துப் பறந்துகொண்டிருந்தாள் மீனா.
மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. பளிச்சிடும் மின்னல்கள் காது செவிடுபடும் இடிமுழக்கம் முறிந்துவிழுகின்ற மரக்கிளைகள் இவை எதுவுமேஅவளை அசைத்துவிடுவதாக இல்லை. ஆனால்… தொடர்ந்து வாசிக்க..