ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.  தொடர்ந்து வாசிக்க

மயக்கம்

ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில்.  தொடர்ந்து வாசிக்க

களவு போன கனவு

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.  தொடர்ந்து வாசிக்க

நிம்மதியைத்தேடி

காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.
 தொடர்ந்து வாசிக்க

கோசலை (இரண்டாம் பகுதி)

முதல் பக்கத்தொடர்ச்சி..

அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.
வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித்திரியும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய அடையாளங்களும்…சாணியும்…

அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது.

கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். “சூ” என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கரிப்புகளாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.

 தொடர்ந்து வாசிக்க