20 வருடங்களை நிறைவு செய்யும் எழில்நிலா!

ஜூலை 14, 2017 உடன் எழில்நிலா வலத்தளம் தனது 20வது வருடத்தைப்பூர்த்தி செய்துகொண்டுள்ளது.

1997ஆம் ஆண்டில் இந்த எழில்நிலா தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட விதமும் அதனுடைய செயற்பாடுகளையும் இத்தளத்தில் இருக்கும் பல கட்டுரைகள் மூலமும் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மூலமும் நீங்கள் தெரிந்துகொள்ளளாம். தமிழை முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்தளம் எவ்வகையான பங்களிப்பைச்செய்திருக்கின்றது என்பதற்கும் அக்கட்டுரைகளும் பின்னூட்டங்களும் சான்றாக உள்ளன.

தொடர்ந்து வாசிக்க

எழில்நிலா 10 ஆண்டுகள் நிறைவு!

ஜூலை 14, 2007 உடன் ‘எழில்நிலா’ வலைத்தளம் தனது 10 ஆவது ஆண்டை நிறைவு செய்கின்றது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் (1997) ஒரு தமிழ் வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவு செய்ய எனக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் உற்சாகத்தையும் வழங்கிய அறிஞர்கள், கணிஞர்கள்  அனைவரையும் நினைவுகூருகின்றேன்.

தொடர்ந்து வாசிக்க

கணிஞர் உமர்தம்பி அவர்களின் மறைவு!

umar_photoதமிழ் கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.

தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதி பெரிதும் உதவி புரிந்தவர்.

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
தொடர்ந்து வாசிக்க