மிகப் பெரிய தொழில் நுட்ப மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0 வெளியீடு

Sellinam-4.0-Logo-300x100இன்று மாலை 7.30 மணிக்கு கோலாலம்பூரில் தொடங்கிய “இணைமதியம்” என்னும்  தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக மிகப் பெரிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் கண்டது.

முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், செல்லினத்தின் புதிய பதிகையில் உள்ள  தொழில் நுட்பக் கூறுகளையும் புதிய மேம்பாட்டு நுணுக்கங்களையும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன், செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கினார்.

 தொடர்ந்து வாசிக்க

“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்!

Murasu-Anjal-New-Logo--300x105“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பு!
கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப் பதிகை இன்று முதல் பயனர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்று அதன் உருவாக்குநர் முத்து நெடுமாறன் இன்று அறிவித்தார்.

இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய “இணைமதியம்” என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா, செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிமுகத்தோடும் நடந்தேறியது.

 தொடர்ந்து வாசிக்க

லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு

libreofficeகோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 – இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது.

‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் பயனர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் அவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.

 தொடர்ந்து வாசிக்க

மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்

smartwatchநம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார். தொடர்ந்து வி.சி.ஆர். வந்தது. 

 தொடர்ந்து வாசிக்க

அச்சுறுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்

Desktop_PCநம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது. இருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.  தொடர்ந்து வாசிக்க