இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்

Zabie Mansooryதற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும்,

தொடர்ந்து வாசிக்க

64 பிட் செயலிகளில் முரசு அஞ்சல்

Murasu-Anjal-New-Logo--300x105முரசு அஞ்சல் முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1985. அப்போது விண்டோசின் புழக்கம் பரவலாக இல்லை. மைக்குரோசாப்டின் எம்.எஸ்.டாஸ் இயக்கத்தைக் கொண்டிருந்த ‘மவுசு’ இல்லாத கருப்புத் திரையில் பச்சை எழுத்துகளைக் காட்டும் கணினிகளே எங்கும் இருந்தன.  இந்தக் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட முரசு அஞ்சல்தான் இன்று விண்டோசிலும், மெக்கிலும், ஐபோன் ஐபேட் கருவிகளிலும், ஆண்டிராய்டிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை சேர்த்து வருகிறது!

தொடர்ந்து வாசிக்க

கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!

lifiஉலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை விட பல மடங்கு, தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப தேவைகளும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தகவல் பரிமாற்றத்தின் அளவு 35 க்வின்ட்டில்லியன் பைட்சாக (Quintillion Bytes) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் வைஃபை  தொழில்நுட்பமான, மின்சாரப் பயன்பாடு உள்ள காலத்தில் தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சமமாகி விடும். அதனால் எதிர்கால தேவை கருதி ஆராய்ச்சியாளர்கள் லைஃபை (Lifi) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

தொழில் நுட்பங்களால் பாதிக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்

pc_userஇன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம்.

இந்த கேள்விக்குப் பதில், நாம் எப்படி நவீன தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்படுகிறோம் என்பதனை அறிந்து, அந்த பாதிப்புகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதற்கான வழி முறைகளைக் காண்பதில் தான் உள்ளது. இங்கு அப்படிப்பட்ட பாதிப்புகள் எவை என்பதனையும், அவற்றிலிருந்து விடுபட நாம் என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் காணலாம்.

தொடர்ந்து வாசிக்க

கூகுள் தந்த பதினெட்டு ஆண்டு சேவை

google_logoஒவ்வொரு நொடியிலும், ஏறத்தாழ 40 ஆயிரம் கேள்விகளைப் பெற்று அவற்றிற்கான பதில்களை நொடியில் நமக்குத் தரும் திறன் படைத்த, கூகுள் தேடுதல் தளம் தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், Google.com என்ற பெயருடன் தேடுதல் தளம் அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 கடந்துவிட்டன. இணையத்தில், எல்லையற்ற தகவல்களை மக்களின் பயன்பாட்டிற்குத் தேக்கி வைத்துத் தரவேண்டும் என்ற இலக்குடன், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தொடங்கி வைத்த கூகுள் தேடல் தளம், தன் 18 ஆண்டுகள் சேவையை முடித்துத் தொடர்ந்து செயல்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க