பருவநிலை மாற்றம் என்கிற பேராபத்தை உலகம் எதிர்கொள்கிறது. 2052-க்குப் பிறகு, உலக வெப்பநிலையில் 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலும் கூட அதன் விளைவு பேரழிவை நோக்கி இட்டுச்செல்லும் அபாயம் காத்திருக்கிறது. அனல் காற்று, கடுமையான மழை, பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு என்று பல்வேறு இயற்கைப் பேரிடர்களை உலகம் சந்திக்க நேரிடும்.
2015-இல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட தட்பவெப்பநிலை அளவும்கூடப் போதுமானதல்ல என்கிற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1850 முதல் 1900 ஆண்டு வரையிலான இயந்திரப் புரட்சிக் காலத்துக்கு முற்பட்ட அளவைவிட, இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகமான அளவுக்கு உலகின் சராசரி வெப்பநிலையை இலக்காக்கி இருந்தது பாரீஸ் ஒப்பந்தம்.
தொடர்ந்து வாசிக்க