கணினியில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை

nhmஎன்.எச்.எம் செயலியின் துணையுடன் கணினியில் தமிழில் எப்படி தமிழ் தட்டச்சு செய்யலாம் என்பதனை இந்தக்காணொளி விளக்குகின்றது.

தொடர்ந்து வாசிக்க..

புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்

tamilFontகம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது ‘லதா’ என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, அந்த சாப்ட்வேர் புரோகிராமுடன் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. தனிப்பட்ட டி.டி.எப். எழுத்துவகையாக, தமிழ் யூனிகோட் கட்டமைப்பில் பயன்படுத்த, அண்மையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று, விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க..

விருப்பமோ இல்லையோ, விண்டோஸ் 10 கட்டாயம்!

win10_pushநீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? திடீரென ஒரு நாள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, உங்கள் கம்ப்யூட்டரை மேம்படுத்தக் கூடிய பைல்கள் அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்களுடைய ஒரு கிளிக் செயல்பாட்டிற்காகக் காத்திருக்கும். “அய்யோ, நான் கேட்கவில்லையே? எனக்கு வேண்டாமே” என்று நீங்கள் சொன்னாலும், விண் 10க்கான பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்திருக்கும். 

தானாக அனுப்பப்படும் இந்த செயல்பாடு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, எத்தனை சாதனங்களில் கொண்டு செல்ல வேண்டுமோ, அத்தனை சாதனங்களிலும் அமைத்துவிட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது. சென்ற ஜூலை வரை, மைக்ரோசாப்ட் இலவச மேம்படுத்துதலை, நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே வைத்திருந்தது. ஆனால், சென்ற வாரத்திலிருந்து, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, தேவை எனக் கருதுகிறீர்களோ இல்லையோ, மைக்ரோசாப்ட் பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பி, உங்களை விண் 10 ஐ ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.

தொடர்ந்து வாசிக்க..

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

win10 விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும், பல பயனாளர்கள், இந்த சிஸ்டத்தினை எப்படி தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்று தயங்கியபடியே உள்ளனர். முதன் முதலாக, (விண்டோஸ் 7 மற்றும் 8.1 கொண்டுள்ளவர்களுக்கு) இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் இதுதான். அது மட்டுமின்றி, முதன் முதலாக, இணையம் வழியாக வழங்கப்பட்டதுவும் இதுவே. 
இலவசமாகக் கிடைத்திடும் இந்த சிஸ்டத்தினை எப்படி இன்ஸ்டால் செய்வது எனப் பல வழிகளை, தகவல் தொழில் நுட்ப பத்திரிகைகள் தந்து வருகின்றன. இணைய தளங்களிலும், சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. எதனைப் பின்பற்றுவது என்ற குழப்பமும், எதனைப் பின்பற்றினால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும் என்ற அச்சமும் பயனாளர்களிடையே உள்ளது. இங்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிந்துரை செய்த மூன்று வழிகளைக் காணலாம்.

தொடர்ந்து வாசிக்க..

கணினி உலகில் சீரழியும் தமிழ்

UNI.Logoகணினி உலகில் மொழி சீரமைப்பு என்ற பெயரில் சிலர்  தமிழ் மொழியைச் சீரழிக்கும் முயற்சிகளில்  ஈடுபட்டு வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த முயற்சிகளை  தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தரணியில் வளர்ந்த தமிழ் கணினியிலும் வளருவதற்கு தமிழ் ஒருங்குறியை (Tamil-Unicode) வளர்த்தெடுக்க வேண்டியது இன்றியமையாதது என்பதால், அதை மேம்படுத்துவதற்கான  முயற்சிகளில் தமிழறிஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழுடன் சற்றும் தொடர்பில்லாத சிலர் தமிழ் ஒருங்குறியை சீரமைப்பதாகக் கூறிக் கொண்டு சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க..