பாஸ்வேர்ட் அமைப்பதில் தவறுகள்

இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர். அதனையும் பல ஆண்டுகளாக மாற்றுவதும் இல்லை. இவை டாகுமெண்ட்கள் மற்றும் பைல்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் பரவாயில்லை. ஆனால், நிதி சார்ந்த டிஜிட்டல் பரிமாற்றங்களில், ஒரே பாஸ்வேர்டினைப் பயன்படுத்துவது, அதனைப் பயன்படுத்துவதன் நோக்கத்தினையே கேலிக் கூத்தாக்கிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள், மிக எளிதாக அந்தப் பாஸ்வேர்டினைப் புரிந்து கொண்டு, அதனைப் பயன்படுத்தி நம் பெர்சனல் தகவல்களையும், பணத்தையும் எடுக்க முயற்சிக்கலாம்.

 தொடர்ந்து வாசிக்க

புதிய எழுத்துப்பிழை திருத்தி (வாணி) அறிமுகம்

தமிழில் நாவி சந்திப்பிழை திருத்தி உட்பட மொத்தம் நான்கு திருத்திகள் உள்ளதாக தமிழ்ப்பேராயம் கூறுகிறது. ஆனால் உலகில் யாவரும் இணையத்தில் பயன்படுத்தும் வண்ணம் தமிழில் முழுமையான ஒரு திருத்தி உருவாக்குவது மிகவும் சவாலான காரியம். தமிழ் மென்பொருட்களுக்கு வணிகச் சந்தை இல்லையென்பதாலும், ஆய்வுச் செலவும், ஆக்கச் செலவும், இணையவெளியீட்டுச் செலவும் பெரிய தடையாகவுள்ளதால் இதுவரை ஒரு முழுமையான மென்பொருள் வெளியாகவில்லை. அதற்கான ஒரு சிறுமுயற்சியாக இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது.

 தொடர்ந்து வாசிக்க

புதிய எழுத்துருமாற்றி (ஓவன்) அறிமுகம்

தமிழ் வலைப்பக்கங்கள், தமிழ்க் கோப்புகள் என பல இடங்களில் தமிழ் எழுத்தில்லாமல் விதவிதமான குறியீடுகளைப் பார்த்திருக்கலாம். அவை வேறு ஒரு தமிழ் எழுத்துருவில் இருப்பதை சிலர் அறிந்து, அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கி வாசிப்பர் அல்லது எழுத்துருமாற்றி மென்பொருளின் துணையுடன் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிப் படிப்பர். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த தமிழ் எழுத்துரு மாற்றிகள் பெரும்பாலும் பத்து பதினைந்து வகைகளை மட்டுமே மாற்றும் திறன் மிக்கது. மேலும் எந்த எழுத்துரு என்று அறிந்தபிறகே மாற்ற முடிந்தது. சில சமயங்களில் எழுத்துருவின் பெயர் தெரியாவிட்டாலும் குழப்பம் நிலவியது. அவற்றிற்கெல்லாம் தீர்வாகப் புதிய எழுத்துருமாற்றி ஓவன் அறிமுகமாகியுள்ளது.

 தொடர்ந்து வாசிக்க

சைபர் ரேப் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

cyberஅரசுப் பதவியில் இருக்கும் கீதாவுக்கு, தொடர்ச்சியாக வெவ்வேறு எண்களில் இருந்து மொபைல் அழைப்புகள் குவியத் தொடங்கின. அத்தனையும் ஆபாச உரையாடலுக்கு அழைப்புவிடுக்கும் மோசமான அழைப்புகள். பதில் சொல்லிச் சொல்லி நொந்துபோனார் கீதா. ஏதோ தவறு நடந்திருக்கிறது என சுதாரித்துக் கொண்டவர், அடுத்ததாக அழைத்த நபரிடம் நட்பாகப் பேசி ‘உங்களுக்கு எப்படி இந்த நம்பர் கிடைத்தது?’ எனக் கேட்க, அவர் உண்மையைக் கொட்ட ஆரம்பித்தார். கீதாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

ஃபேஸ்புக்கில் இயங்கும் ஆபாசக் குழு ஒன்றில், கீதாவின் புகைப்படத்தையும் அவருடைய செல்போன் எண்ணையும் யாரோ பகிர்ந்திருக் கிறார்கள். அந்தக் குழு, முழுக்க முழுக்க ஆபாசப் படங்களும் வீடியோக்களும் பகிர்ந்துகொள்ளப்படும் விபரீதமான இடம். கீதாவின் பெயரில் அவருடைய புகைப்படத்தோடு ஃபேக் ஐ.டி ஒன்றும் தொடங்கப்பட்டிருக்கிறது.

 தொடர்ந்து வாசிக்க

தமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி?

Sellinam-4.0-Logo-300x100ட்டச்சுப் பொறிகளில் (டைப்ரைட்டர்) தமிழைப் பயன்படுத்தும் காலகட்டம் கடந்து போக, இப்போது கணினிகளில் தமிழைத் தட்டச்சு செய்யும் காலம் வந்துவிட்டது.

இப்போது அதையும் தாண்டி, ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில், தமிழ் அரங்கேறி, இப்போது கைத்தொலைபேசிகளிலேயே தமிழைத் தட்டச்சு செய்து ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது.

 தொடர்ந்து வாசிக்க