கனடாவின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

2017 ஆண்டு, கனடாவின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான மகழ்சியை தரும் ஆண்டாக அமைய இருக்கின்றது. குறித்த கொண்டாட்டங்களை “ஒட்டாவா 2017” என்ற தலைப்பில், தலைநகரில் முன்னெடுப்பது தொடர்பிலான விளக்கக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஒட்டாவா நகரபிதா ஜிம் வாட்சன், கனேடிய தலைநகரின் சிறப்பினை பறைசாற்றுவதற்கான ஒரு படிக்கல்லாக இந்த நிகழ்வு அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டதோடு, 2017ஆண்டின் பாரம்பரிய புத்தாண்டு விடியலின் போது வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகவுள்ள கொண்டாட்டங்கள், 2017ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், ஒட்டாவா மாத்திரமன்றி, ஏனைய மாகாணங்களில் உள்ள நகரங்களும் நாட்டின் பிறந்த நாளை பல்வேறு வகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளன. ஆயினும் அனைத்துக்கும் முத்தாய்ப்பாகவும், அனைத்துக்கும் ஒரு படி மேலாகவும் தலைநகரின் கொண்டாட்ட நிகழ்வுகள் அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி ஆண்டு முழுவதுக்கும் ஒட்டாவாவில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளுடன், விருந்துபசாரங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜுலை மாதத்தின் ஐந்து நாட்களில் ஒட்டாவாவில் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் ஒட்டாவா நகரபிதா தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய..