அறிமுகம்

எழில்நிலா வலைத்தளம் பற்றிய ஒரு சிறிய குறிப்பு.

mahen

‘எழில் நிலா’ தமிழ் வலைத்தளம் ஒரு மாத, வார சஞ்சிகை அல்ல.
இது  ஒரு ‘வலைத்தள மின் நூலகம்’. இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த, படித்துச் சுவைத்த, சிந்தித்த சில பகுதிகள், மற்றும் உங்களுக்கு உதவக்கூடிய தமிழ் இணையம் பற்றிய சில கடந்த கால,  நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன்.

நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவற்றில் சில உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லது பயன்படக்கூடியதாகவும் இருக்கலாம்.

மேலும் இத்தளம் தமிழ் யுனிகோட் எழுத்து முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றது (2003). இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

நன்றி!

sign1

 

 

கனடாவிலிருந்து..
ஜனவரி 14, 2003

 

எழில்நிலாவின் நிகழ்வுக்குறிப்பு!

இந்த ‘எழில் நிலா’  வலைத்தளம் ஜூலை 14, 1997 ல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது: பின்னர் ஜனவரி 14, 2003 அன்று இத்தளம் முற்றும் முழுதாக தமிழ் யுனிகோடிற்கு மாற்றப்பட்டது. இந்த இடைக்காலத்தில் நடந்த போராட்டங்களை  தமிழ் கணனியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள் என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் யுனிகோடை பலரும் பயன்படுத்தவேண்டும் அதனை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் பல கட்டுரைகள், உதவிப்பக்கங்கள் மற்றும் யுனிகோட் எழுத்துருக்கள், செயலிகள் என்பனவற்றைத்தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். கட்டுரைகளை வரைந்தும் செயலிகளை உருவாக்கியும் அளித்த அறிஞர்கள், கணிஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

1997 லிருந்து www.pathcom.com/~mahend என்ற முகவரியில் இயங்கி வந்த இந்த வலைத்தளம் டிசம்பர் 14, 2002 லிருந்து www.ezilnila.com என்ற சொந்த முகவரியுடன் இயங்க ஆரம்பித்தது.

2007 ஜூலை 14ம் திகதியுடன் ‘எழில்நிலா’ பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டுள்ளது. பத்து ஆண்டுகளை நிறைவு செய்த ‘எழில்நிலா” விற்குக்கிடைத்த வாழ்த்துச்செய்திகளின் சிறப்புப்பக்கம்.

2009 ஜூலை 14ம் திகதியிலிருந்து ‘எழில்நிலா’ வலைத்தளம் சில பிந்திய தொழில்நுட்ப மேம்பாட்டினை மேற்கொண்டு புதிய வடிவம் பெற்றுக்கொண்டுள்ளது.

2014 ஏப்ரல் 23ம் திகதியிலிருந்து எழில்நிலா வலைத்தளம் புதிய தொழில்நுட்பத்தைப் (Responsive Web Design) புகுத்திக்கொண்டுள்ளது.  இதன் மூலம் மேசைக்கணினி, மடிக்கணினி மட்டுமல்லாது வில்லைக்கணினிகளும் செல்லிடத் தொலைபேசிகளும் தளத்தை சிறப்பாகக்காட்சிப்படுத்தும்.

2017 ஜூலை 14ம் திகதியுடன் ‘எழில்நிலா’ இருபது ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டுள்ளது.

comp_man